பயணிகள் நிழற்குடையில் சேதமான இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை

 

ஊட்டி, ஆக. 2: நீலகிரி மாவட்டம் ஊட்டி எட்டின்ஸ் சாலை வழியாக அனைத்து அரசு பஸ்களும் சென்று வருகின்றன. ஏடிசி., பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சேரிங்கிராஸ் பகுதியில் பெரியார் நூற்றாண்டு நினைவு தூணுக்கு எதிரே சாலையோரத்தில் காத்திருப்பது வாடிக்கை. இப்பகுதியில் நிழற்குடை இல்லாததால் மழை காலங்களில் நனைந்தபடியே காத்திருக்க வேண்டி சூழல் இருந்து வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு ஜூன் தனியார் அமைப்பு மூலம் இப்பகுதியில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டது. இதனை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிழற்குடையில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து உடைந்து போய் காட்சியளிக்கிறது.

இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டே பஸ்சிக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சேவை அடிப்படையில் தனியார் அமைப்பு நிழற்குடை அமைத்து கொடுத்துள்ள நிலையில், பயணிகளின் நலன் கருதி சேதமடைந்த இருக்கைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post பயணிகள் நிழற்குடையில் சேதமான இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: