பந்தலூர் கூட்டுறவு வங்கியில் தொழிலாளர்கள் செலுத்திய சேமிப்பு பணத்தை வழங்க கோரிக்கை

 

பந்தலூர், ஜூலை 30: பந்தலூரில் செயல்படும் நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் தொடர் வைப்புத்தொகை-ரெக்கரிங் டெபாசிட் பிடிக்கப்பட்ட பணம் திரும்ப வழங்க அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது. பந்தலூர் அம்பேத்கார் மக்கள் இயக்க செயலாளர் இந்திரஜித் மாவட்ட கலைக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட தோட்டத்து தொழிலாளர் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் மேங்கோரஞ் எஸ்டேட் மேங்கோரஞ், டிவிசன் 1, 2, அத்திக்குன்னா டிவிசன் 1, 2 எஸ்டிஆர், ஏடிகே, ரிச்மௌண்ட் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினராகி உள்ளனர். இவர்களிடம் மாதம் ரூ.500 முதல் ரூ.1000 என தங்களின் வசதிக்கேற்ப மாதாந்திர தொடர் வாய்ப்புத்தொகை செலுத்தி வந்தனர். இதற்கு கால அளவு 2 வருடம் என கூறி சேர்க்கப்பட்டது. ஆனால், தற்போது குறிப்பிட்ட காலம் 24 மாதங்கள் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

ஆனால், வைப்புத் தொகை நிர்ணய கால அளவு நிறைவடைந்து 2 மாதங்களுக்கு மேலாகி உள்ள நிலையில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வைப்புத்தொகையினை உரிய வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டியது வங்கியின் பொறுப்பாகும். ஆனால், இந்த தொகை உரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் ஆடிப்பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து தீபாவளி வரை தொடர் பண்டிகைகளும் வர உள்ளது.  எனவே, தொழிலாளர்களிடம் மாதாந்திர அடிபடையில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தொழிலாளர்களுக்கு உரிய வட்டியுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

The post பந்தலூர் கூட்டுறவு வங்கியில் தொழிலாளர்கள் செலுத்திய சேமிப்பு பணத்தை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: