‘கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ – அமைச்சர் பொன்முடி

சென்னை: கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம். கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்வதற்கான குழு அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. குறைகேடு நடந்ததால் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது எனவும் கூறினார். …

The post ‘கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ – அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Related Stories: