கலைஞர் நூற்றாண்டு விழா அரசு பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 13: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தற்செயலாக வீடுகளில் தீவிபத்து ஏற்படுவதும் உண்டு. அப்போது எண்ணெயால் ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது. சமையல் எரிவாயுவால் ஏற்படும் எரிவாயு கசிவு அதனால் ஏற்படும் தீ இவைகளை எவ்வாறு கையாள்வது, தீயை கட்டுப்படுத்தி அணைப்பது, தீ ஏற்பட்ட வீடுகளில் இருந்து மக்களை எவ்வாறு வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவது போன்றவை பற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறைகள் ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் ஏற்பாடுகளை செய்து காண்பித்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா அரசு பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: