கலெக்டரிடம் கோரிக்கை மனு

 

தேனி, மே 5: தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் மாவட்ட கலெக்டர் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்த மனுவில், தேனி நகர் மையப்பகுதியில் கம்பம் சாலை மற்றும் மதுரை சாலை சந்திப்பில் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தேனிக்கான புதிய பேருந்து நிலையம் கர்னல் ஜான் பென்னிகுக் பெயரில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் நகரப் பேருந்துகளில் பழைய பேருந்து நிலையம் என்ற பெயரில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காமராஜர் பேருந்து நிலையம் என இயக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அளித்த நிலையில் சில மாதங்கள் மட்டும் நகரப் பேருந்துகளில் காமராஜர் பேருந்து நிலையம் என குறிப்பிடப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் பழைய பேருந்து நிலையம் என்று பெயர் பலகை பொருத்தப்பட்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து நகரப் பேருந்துகளில் பழைய பேருந்து நிலையம் என்பதற்கு பதிலாக காமராஜர் பேருந்து நிலையம் என பெயர் பலகைகளுடன் நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

The post கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: