கரூர் வந்திறங்கிய ஆந்திரா தர்பூசணி பழங்கள்

கரூர், ஏப். 13: கரூரில் கோடையை சமாளிக்கும் வகையில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தர்ப்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுதும் தற்போது கோடை வெயில் உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வருகிறது. அந்த பட்டியலில் கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கடும் வெயில் காரணமாக பொதுமக்கள், கோடையை சமாளிக்கும் வகையில், இளநீர், முலாம்பழம், தர்ப்பூசணி போன்ற பழங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில், பிப்ரவரி மாதத்தில் இருந்தே தர்ப்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை, திண்டிவனம், விழுப்புரம் போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணி பழங்கள் கருர் மாநகர பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, ஆந்திர மாநில பகுதிகளில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணி பழங்களும், மொத்தமாக கொண்டு வரப்பட்டு கரூரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தர்ப்பூசணி பழங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, ஜவஹர் பஜார், ஆசாத் சாலை, கோவை ரோடு மற்றும் லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், சுங்ககேட், தாந்தோணிமலை பகுதிகளில் வியாபாரிகளால் விற்பனையாகிறது. திருமாநிலையூரில் விற்கப்படும் ஆந்திரா தர்ப்பூசணி பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

The post கரூர் வந்திறங்கிய ஆந்திரா தர்பூசணி பழங்கள் appeared first on Dinakaran.

Related Stories: