கடப்பா மாவட்டத்தில் ₹9.98 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்-4 பேர் கைது

திருமலை : கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா காவல் நிலைய போலீசார் மண்டபம்பள்ளி ஊராட்சியில் உள்ள ராமச்சந்திரபுரம் பள்ளியில் இன்ஸ்பெக்டர் புருஷேத்தம் ராஜூ தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செம்மரக்கடத்தல்காரர்கள் போலீசார் மீது கோடாரிகளை எறிந்து கொன்று விடுவோம் என சத்தமாக கூச்சலிட்டு அங்கிருந்து ஓட முயன்றனர். இதில்,  சிலர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் 4 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹9.98 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், 3 செல்போன்கள்,  2 பைக்குகள், 4 மரம் அறுக்கும் ரம்பம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடப்பாவை சேர்ந்த குண்டல பென்சலயா(37), கல்லபாட்டி ஜானு(27), புலி லட்சுமிகர்(40), ரெட்டையா(48) ஆகிய 4 பேரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்ததாக மாவட்ட எஸ்பி அன்புராஜன் தெரிவித்தார்….

The post கடப்பா மாவட்டத்தில் ₹9.98 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்-4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: