பிளஸ்2 சிறப்பு துணைத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்று இன்று பெறலாம்

சென்னை: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடந்தது. இந்த தேர்வு எழுத தனித் தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள், தக்கல் முறையின் கீழ் விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு துணைத் தேர்வின் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் இன்று பிற்பகல் முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியோர் இன்று முதல் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை www.dge.tn.nic.in என்ற இணையத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட சிறப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் செய்ய விரும்புவோர் 25, 26ம் தேதிகளில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி  பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: