ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சே மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போராட்டகாரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜனாமா செய்துள்ளார். ஒரு இடத்திற்காக போராடிய விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடுரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை. இனப்படுகொலை செய்யப்பட்டபோது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: