ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சேத்துப்பட்டு 16வது அவென்யூவில் பிரபல வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் முகக்கவசம், கையுறை அணிந்து கொண்டு பணம் எடுப்பது போல் நடித்து, ஏடிஎம் மெஷினை இரும்பு ராடால் உடைத்துள்ளனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஐதராபாத்தில் உள்ள ஏடிஎம் மையத்தின் தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்துள்ளது. உடனே இதுபற்றி ஐதராபாத்தில் உள்ள வங்கி கட்டுப்பாட்டு அதிகாரிகள், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏடிஎம் மையம் உள்ளே சென்று பார்த்தபோது, மெஷினை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது தெரியவந்தது. ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: