எம்பி, எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்

சேலம், ஏப்.4: சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக விளங்கவும், வரும் எம்பி, எம்எல்ஏ தேர்தலில் முழுமையாக வெற்றி பெறவும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, உடன்பிறப்பாய் இணைவோம் என்ற முழக்கத்தோடு திமுக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம் மத்தியம், மேற்கு, கிழக்கு ஆகிய 3 மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை பணியை திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று, மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி, கன்னங்குறிச்சி ஆகிய இடங்களில் தொடங்கி வைத்தார்.

சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னங்குறிச்சியில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 4ஆண்டுகள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்திற்கு செய்ய முடியாத பணிகளை, திமுக அரசு வந்தபின் 20 மாதங்களில் செய்து முடித்துள்ளோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை தந்திருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெறும். அதேபோல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான தொடக்கம் தான், இந்த உறுப்பினர் சேர்க்கை. ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 18 வயது நிரம்பிய இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என அனைவரையும் சேர்த்து கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்பதற்கு தான், உடன்பிறப்பாய் இணைவோம் என்ற திட்டத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் காலத்தில் எப்படி சேலம் திமுக கோட்டையாக இருந்ததோ, அதுபோல் மீண்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும். எந்த பணியாக இருந்தாலும், தஞ்சை, சேலம் மாவட்ட திமுக தொண்டர்களை மிஞ்ச முடியாது. அதனால் இந்த உறுப்பினர் சேர்க்கையிலும் மாவட்ட செயலாளர்கள், பார்வையாளர்கள் அறிவுறுத்தல்படி நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட்டு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

கூட்டத்தில், 4 தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை பார்வையாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், வெங்கடேசன், உதயசூரியன், வீரகோபால், சேலம் மாநகர செயலாளர் ரகுபதி, அவைத்தலைவர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், மத்திய மாவட்ட துணைச்செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மாநகர துணைச்செயலாளர்கள் கணேசன், தினகரன், பகுதி செயலாளர்கள் ஏ.எஸ்.சரவணன், ஜெய், ஜெகதீஷ், மணமேடு மோகன், கவுன்சிலர்கள் கோபால், சீனிவாசன், சங்கீதா, தெய்வலிங்கம் உள்பட பலர்

கலந்துகொண்டனர்.

The post எம்பி, எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: