உள்ளாட்சி தேர்தலால் மாட்டு சந்தையில் விற்பனை சரிவு

ஓமலூர் : ஓமலூர் அருகே பெருமாள் கோயில் கிராமத்தில், தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மாட்டு சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோல, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில், நேற்று கூடிய மாட்டு சந்தைக்கு இறைச்சிக்கான வெட்டு மாடுகள், வளர்ப்பு இளம் கன்றுகள், பால் கறக்கும் எருமைகள், எருமை கன்றுகள், கறவை மாடுகள், கிடாரிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.சினை மற்றும் கறவை மாடுகள் ₹40ஆயிரம் முதல் ₹55ஆயிரம் வரையிலும், காளை கன்றுகள் ₹10 ஆயிரம் முதலும், இளம் கன்றுகள் ₹15ஆயிரம் வரையிலும், எருமைகள் ₹60ஆயிரம் வரையிலும், எருமை கன்றுகள் ₹7ஆயிரம் முதலும் விற்பனை செய்யப்பட்டது.அதேபோல், இறைச்சி மாடுகள் ₹25 ஆயிரம் முதல் விற்பனையானது. ஆனால், இந்த வாரம் கால்நடைகள் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்தது.வெளிமாநில வியாபாரிகள் வியாபாரிகள் வரத்து மிகவும் குறைந்தே இருந்தது. மேலும், பணம் ₹50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்ல முடியாததால், உள்ளூர் வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே மாடுகளை வாங்கினர். அதனால், நேற்று கூடிய மாட்டு சந்தையில், சில லட்சம் அளவிற்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்….

The post உள்ளாட்சி தேர்தலால் மாட்டு சந்தையில் விற்பனை சரிவு appeared first on Dinakaran.

Related Stories: