ஈரோடு தூய்மையே சேவை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, செப். 17: ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மையை வலியுறுத்தி நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் தலைப்பில் இரு வார காலத்திற்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடு, தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக காலிங்கராயன் இல்லத்தில் நிறைவடைந்தது. பேரணியில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தூய்மையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

The post ஈரோடு தூய்மையே சேவை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: