ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்த மனுக்களை கோரி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கடிதம்: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை நடவடிக்கை

சென்னை: உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக 302 மனுக்களை கேட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலிலதா கடந்த 2016ம் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 302 புகார்கள் அளிக்கப்பட்டன. இதற்கிடையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதால், ேதனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த 302 புகார்களும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், 4 வருடங்களுக்கு மேலாகியும் விசாரணைக்கு அழைக்கபடாததால் புகார் அளித்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேனாம்பேட்டை காவல்நிலையம் சார்பில் ஆஜரான போலீசார், ஆணையம் அமைக்கப்பட்டதால் 302 புகார்களும் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார் மனுக்களை அடுத்த விசாரணையின் போது ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, 302 மனுக்களை கேட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு காவல்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆணையத்திடம் இருந்து புகார் மனுக்களை பெற்று அடுத்த விசாரணையின் போது ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: