இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.5.70 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

 

தேனி, மே 4: இன்ஸ்ட்ராகிராமில் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த கும்பல் குறித்து தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
உத்தமபாளையம் தென்னகர் காலனியை சேர்ந்தவர் சற்குணம். இவரது மகள் சங்கீதா(23). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் பார்ட் டைம் வேலை தருவதாகவும், இந்நிறுவனம் தரும் செலபிரிட்டியின் இன்ஸ்டாகிராம் ஐடியை பாலோ செய்து, அதன் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பினால் ஒவ்வொரு ஐடிக்கும் ரூ.50 தருவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து விபரங்களை டெலிகிராம் மூலம் ஆன்ட்ரியா என்பவர் சொல்லித் தருவார் என சொல்லி ஒரு டெலிகிராம் லிங்கை அனுப்பியுள்ளனர்.

இதனை சங்கீதா ஓபன் செய்து பேசியபோது, முதலில் போனஸ் தொகையாக ரூ.150 சங்கீதாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இதில் இரண்டு டாஸ்க்குகள் இருப்பதாகவும், அதில் பிரிபெய்டு டாஸ்க் செய்தால் ஒவ்வொரு இன்ஸ்ட்டா ஐடி பாலோவுக்கும் ரூ.50 கிடைக்கும் எனவும், பிரிபெய்டு டாஸ்க் இல்லாமல் செய்தால் ரூ.25 மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் சங்கீதா பிரிபெய்டு டாஸ்க்கினை தேர்வு செய்துள்ளார். இதில் பிரிபெய்டு டாஸ்க்கில் ஒரு வெப்சைட்டில் பதிவு செய்து அந்த வெப்சைட் நிறுவனம் அளிக்கும் டாஸ்க்குகளை பணம் கட்டி வாங்கி முடித்தால் அதற்கும் லாபம் கிடைக்கும் எனவும், இன்ஸ்டாகிராம் டாஸ்க்குக்கிற்கும் பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சங்கீதா கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் சிறிது சிறிதாக போலியான நிறுவனம் அனுப்பிய வங்கிக் கணக்கிற்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 180 அனுப்பினார். ஆனால் இப்பணத்தை தற்போது எடுக்க முயற்சித்தபோது, எடுக்க முடியவில்ைல. அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சங்கீதா தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்ஐ தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.5.70 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: