இந்தியா-இலங்கை மோதும் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி: பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது

பெங்களூரு: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை பகலிரவு போட்டியாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. மொகாலியில் ஜடேஜா 175 ரன் விளாசியதுடன் 9 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். விராட் கோஹ்லி சதம் அடித்து இரண்டரை ஆண்டாகிவிட்டது. ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோஹ்லி 2019க்கு பின் இங்கு விளையாட உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தனது 71வது சதத்தை பெங்களூருவில் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஜெய்ந்த் யாதவிற்கு பதிலாக அக்சர் படேல் களம் இறங்குவார்.மறுபுறம் இலங்கை அணி பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் கருணாரத்னே, மேத்யூஸ், டிக்வெல்லா போன்ற அனுபவ வீரர்கள் இருந்தும் இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. 2 இன்னிங்சிலும் 200 ரன் கூட அடிக்க முடியவில்லை. பவுலிங்கிலும் அனுபவ வீரர்கள் இல்லை. இதனால் பரிதாபமான நிலையில் உள்ளது.இரு அணிகளும் இதுவரை 45 டெஸ்ட்டில் விளையாடி உள்ளன. இதில் 21ல் இந்தியா, 7ல் இலங்கை வென்றுள்ளது. 17 போட்டி டிராவில் முடிந்துள்ளது. நாளை மோதுவது 46வது போட்டியாகும்.இந்தியாவில் கொரோ னா தொற்றும் பெருமளவில் குறைந்துள்ளதால் பெங்களூரு மைதானத்தில் 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை கண்டு ரசிக்கலாம். மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஸ்டெயினை முந்தும் அஸ்வின்இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 85 டெஸ்ட்டில் 436 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அவர் நாளை தொடங்கும் டெஸ்ட்டில் இன்னும் 3 விக்கெட்வீழ்த்தினால் தென்ஆப்ரிக்காவின் ஸ்டெயினைமுந்துவார். ஸ்டெயின் 93 டெஸ்ட்டில் 439 விக்கெட் எடுத்துள்ளார்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை…பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 23 டெஸ்ட்டில் ஆடி உள்ளது. இதில் 8ல் வெற்றி, 6ல் தோல்வி கண்டுள்ளது. 9 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 2018ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை 1994ல் ஒரே ஒரு டெஸ்ட்டில் ஆடி இந்தியாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 94 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.* பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 2007ல் 626 ரன் எடுத்ததே பெங்களூருவில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்னாகும்.* டெண்டுல்கர் இங்கு 9 டெஸ்ட்டில் 2 சதத்துடன் 869 ரன் எடுத்துள்ளார்.* அனில் கும்ப்ளே 9 போட்டியில் 41 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.இந்தியாவில் 3வது பிங்க் பால் டெஸ்ட்* இந்தியாவில் இதற்கு முன் 2 பகலிரவு டெஸ்ட் நடந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடந்த ஆண்டு அகமதாபாத்தில் நடந்த போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பகலிரவு டெஸ்ட்டில் பிங்க் பால் பயன்படுத்தப்படும். இந்த பந்தில் மின்னொளியில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும்.* நாளை தொடங்குவது இந்தியாவில் நடக்கும் 3வது பகலிரவு டெஸ்டாகும். அதேநேரத்தில் இந்தியா ஆட உள்ள 4வது பகலிரவு டெஸ்ட் போட்டி இது. அடிலெய்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2020ல் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.* ஒட்டு மொத்தமாக நாளை தொடங்குவது 19வது சர்வதேச பகலிரவு டெஸ்டாகும். அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 10 போட்டியில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது.*  இலங்கை அணி இதுவரை 3 பகலிரவு டெஸ்ட்டில் ஆடி உள்ளது. 2017ல் துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 2018ல் கிங்ஸ்டனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் வென்றுள்ளது. 2019ல் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது.புதிய சாதனை படைக்கும் ரோகித்சர்மா* பெங்களுருவில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு சிறப்பு சாதனையை முயற்சிக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை 6-0 (ஒரு நாள் போட்டியில் 3-0 மற்றும் டி20 தொடரில் 3-0) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. இதேபோல் இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது. 2வது டெஸ்டில் வெற்றி பெற்றால், இந்தியா தொடர்ந்து 11வது போட்டியை வெல்வது மட்டுமல்லாமல், கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2வது தொடரை ஒயிட்வாஷ் செய்யும்.* ரோகித்சர்மா நாளை களம் இறங்குவது 400வது சர்வதேச போட்டியாகும். அவர் இதுவரை 44 டெஸ்ட், 230 ஒன்டே மற்றும் 125 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்த வரிசையில் டெண்டுல்கர் (664 போட்டி), டோனி (538), ராகுல் டிராவிட் (509), விராட் கோஹ்லி (457), முகமது அசாருதீன் (433), சவுரவ் கங்குலி (424), அனில் கும்ப்ளே(403), யுவராஜ் சிங் (402) போட்டிகளில் ஆடி உள்ளனர்….

The post இந்தியா-இலங்கை மோதும் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி: பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: