இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில் விரைவில் ஆகாசா ஏர் விமான சேவை : ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி : ஆகாசா ஏர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய விமான நிறுவனம் ஒன்றிற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2022 டிசம்பரில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த மாத கடைசியில் இருந்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் பயணிகள் விமான சேவையை தொடங்க உள்ளது. மிகவும் குறைந்த கட்டணத்தில் வரும் 2023, மார்ச் மாதத்திற்குள் சுமார் 18 விமானங்களை இந்தியாவில் இயக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.படிப்படியாக வருடத்திற்கு 12 முதல் 14 வரை என ஐந்து ஆண்டுகளில் 72 விமானங்களை இயக்க உள்ளதாகவும் தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் பகுதியில் இந்த நிறுவனத்தின் விமானங்கள் வடிவமைக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. QP என்ற ஏர்லைன் கோட் இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது….

The post இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில் விரைவில் ஆகாசா ஏர் விமான சேவை : ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: