ஆவடிப்பகுதி ரேஷன்கடைகளில் விற்பனையாளர்கள் பற்றாக்குறைவால் உணவுபொருள் விநியோகப்பதில் சிக்கல்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி வீட்டுவசதி வாரியம், திருமுல்லைவாயில், ஓ.சி.எஃப் ரேஷன் கடைகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் உணவு பொருட்கள் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் ஆவடி வட்டத்தில் 131 ரேஷன் கடைகள் உள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கடைகளில் மட்டும் விற்பனையாளர், எடையாளர்கள் போதியளவில் உள்ளனர். ஆனால் ஆவடி மாநகராட்சி வட்டத்திற்குள் இயங்கும் ரேஷன் கடைகளில் எடையாளர்கள் இல்லாமல் விற்பனையாளர்கள் மட்டும் உள்ளனர். 20 சதவீத்திற்கும் மேற்பட்ட கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் இரண்டு மூன்று கடைகளுக்கு பொறுப்பாளராக உள்ளனர்.அவர்கள் பொறுப்பு வகிக்கும் ரேஷன் கடைகளில் அறிவிப்புப் பலகை வைக்காமல் மூடி இருப்பதால் பொதுமக்கள் எங்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்குவது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். ஆகையால் மூடி இருக்கும் ரேஷன் கடைகளில் போதுமான ஊழியர்களை பணியமர்த்தி, ரேஷன் இருப்பு பொருட்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்….

The post ஆவடிப்பகுதி ரேஷன்கடைகளில் விற்பனையாளர்கள் பற்றாக்குறைவால் உணவுபொருள் விநியோகப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: