ஆற்றில் திடீர் வெள்ளம்: 100 மணல் லாரிகள் சிக்கியது

திருமலை: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், நந்திகாமாவில் உள்ள கிருஷ்ணா நதிக்கு புலிசெந்துலாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இந்நிலையில், நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், எதிர்பாராதவிதமாக கன்சிகசெர்லா மண்டலம், செவிட்டிகல்லு பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க சென்ற 100 லாரிகள் திடீர் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் கரைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தது. மேலும், ஆற்றில் போடப்பட்டிருந்த சாலைகள் வெள்ளத்தில் முழுவதும் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர்களை படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். …

The post ஆற்றில் திடீர் வெள்ளம்: 100 மணல் லாரிகள் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: