அஷ்டகத்தை போற்றி கஷ்டத்தை விலக்குவோம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம் லிங்காஷ்டகம்ஸ்ரீ லிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலி யவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.1) ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஸித ஸோபித லிங்கம்Iஜன்மஜது:க வினாஸக லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIபிரம்மதேவன், ஸ்ரீ மஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.2) தேவமுனிப்ரவரார்சித லிங்கம்காமதஹம்கருணாகர லிங்கம்Iராவணதர்ப்ப வினாஸன லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIதேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.3) ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்புத்திவிவர்த்தனகாரண லிங்கம்Iஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIஎல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, சித்தர்கள், தேவர்கள் அசுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.4) கனகமஹாமணிபூஷித லிங்கம்பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்Iதக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIதங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.5) குங்குமசந்தனலேபித லிங்கம்பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்Iஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIகுங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.6) தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்பாவைர்பக்திபிரேவச லிங்கம்Iதினகரகோடிப்ரபாகர லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIதேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், சேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் சேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.7) அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்Iஅஷ்டதரித்ரவினாஸித லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIஎட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.8) ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்Iபராத்பரம் பரமாத்மக லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.9) லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேIIஸ்ரீலிங்காஷ்டகத்தை மனதில் சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் ஜெபித்து சிவதரிசனம் செய்வதால் சிவபெருமான் மற்றும் நந்தியின் அருளும் இணைந்து கிடைக்கும்.தொகுப்பு: குடந்தை நடேசன்

The post அஷ்டகத்தை போற்றி கஷ்டத்தை விலக்குவோம்! appeared first on Dinakaran.

Related Stories: