விபரீத ராஜயோகம்!

பிராரப்த கர்மா

ஒருவருடைய வாழ்க்கையில், பிராரப்தகர்மா என்பது மிக முக்கியமானது. வாழ்க்கையில் நடக்கும் செயல்கள், உடல் துன்பங்களால் ஏற்படும் வலிகள், தண்டனைகள், பாராட்டுக்கள், மாலை, மரியாதைகள் எல்லாம் உடலுக்கு கிடைக்கிறது என்றால், உடல் மூலம் நல்ல செயல்கள், தீய செயல்கள் காலத்தின் வழியே செய்யும்போது, இதை நாம் கர்மா என்கிறோம். இந்தக் காலத்தில் உடலின் மூலமாக யாருக்கும் தீங்கு விளைவிக்காமல், உடல் மூலமாக செய்யக் கூடிய செயல்களின் மூலமாக இருவரின் (கணவன் – மனைவி) வாழ்க்கையில் பாதகம் இல்லாமல் அமைந்தால், பிராரப்தகர்மா உங்களது வாழ்க்கைக்கு வழி கொடுக்கும்.உதாரணமாக, கொடுத்த வேலையை செய்யாமல் காலத்தை நேரத்தை கடக்கக் கூடியவர்களுக்கு பிராரப்தகர்மா வேலை செய்யாது. அதற்கும் ஜாதகத்தில் விதி உண்டு.100 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாலும், 40 பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும். 40 பேருக்கு மனது சரியில்லாமல் இருக்கும். 20 பேருக்குதான் உடலும் மனமும் சேர்ந்து இயங்கும். ஒவ்வொரு வயது காலத்திற்கும் அட்சய லக்னமும் அட்சய ராசியும் மாறிக் கொண்டே இருக்கும். காலம் அதன் போக்கில் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.ஒருவருடைய ஜாதகத்தை பார்ப்பதற்கு முன்பு, உடல் பாதிப்பு என்றால் நோய், அடிக்கடி மேல் வலி, தொற்று நோய்கள், அடிபடுதல், வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், அலர்ஜி, தும்மல், இருமல் போன்ற உடல் பாதிப்பு என்றால், அட்சய லக்னத்தைக் கொண்டு கணக்கிட வேண்டும்.

அட்சய ராசி என்பது என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் மனம் பிரச்னை என்றால், சித்த பிரம்மை, மன இறுக்கம், தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, பயம், கோபம், காழ்ப்புணர்ச்சி, குரோதம், வன்மம் இதுபோன்ற காரணிகள் அதீதமாக காணப்படுவதை அட்சய ராசியைக் கொண்டு கணக்கிட வேண்டும். ராசி என்பது பிறப்பின் நோக்கம், அட்சய ராசி என்பது இன்றைய காலகட்டத்தில் எப்படி அனுபவிக்கப் போகிறார் என்பதை சொல்வது. பிறப்பின் நோக்கம், எல்லா குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகள்தான்.பிறக்கும் போது தூய மனதுடன்தான் பிறக்கின்றது. சந்திரனின் நிலை எந்த கள்ளம் கபடம் இல்லாமல் பரிசுத்தமாகவே பிறக்கிறது. அது வளரும் சூழ்நிலைகளை பொறுத்து அவரின் மனம் தீர்மானிக்கப்படுகிறது. (இடம், பொருள், கலாச்சாரம், மொழி, பண்பாடு சார்ந்ததே). இப்பொழுது அட்சய லக்னமும், அட்சய ராசியும் சேர்ந்து இயங்கினால் விபரீத ராஜயோகம் என்று பொருள் கொள்ளலாம். அட்சய லக்ன புள்ளியும், அட்சய ராசி புள்ளியும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால் யோகம் அதிர்ஷ்டமான காலமாக அமையும்.அட்சய லக்னம், அட்சயப் புள்ளி 1,4,7,10ல் சென்றால், நிகழ்காலத்தில் யோகமாக அனுபவிக்கக்கூடிய அனைத்தையும் அடைவார். ஆனால், அட்சய ராசி புள்ளி 2,5,8,11ல் அல்லது அட்சய லக்னத்திற்கு 2,5,8,11ல் இருந்தால், உடல் நன்றாக வேலை செய்யும். புத்தி தவறாக முடிவெடுக்கும். அட்சய லக்ன புள்ளிக்கு அதிபதியும், அட்சய ராசியின் அதிபதியும் இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக வந்தால், கண்டிப்பாக ஒரு வாய்ப்புண்டு. யோகமான காலமாக அமையும். அட்சய லக்னப் புள்ளியும், அட்சய ராசி புள்ளியும் 1,4,7,10ல் இருந்து அந்த கிரகங்கள் சுபராக அல்லது யோகமான, உச்சமான, கிரகமாக அமைந்தால், விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.

The post விபரீத ராஜயோகம்! appeared first on Dinakaran.

Related Stories: