அரியலூரில் ஓபிஎஸ் அணி, அமமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஆக 2: அரியலூர் பேருந்து நிலையம் முன்பு ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக கூட்டணியினர் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலர் விஜயபார்த்திபன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் கவிதாராஜேந்திரன், அவைத் தலைவர் ரவிச்சந்திரன், நகரச் செயலர் உத்தாண்டம் கார்த்திக், மாநில துணைச் செயலர் ராஜ்குமார், ஒன்றியச் செயலாளர்கள் லோகராஜ், சுரேஷ், புகழேந்தி, அமமுக நிர்வாகி தமிழரசன், வடிவேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

The post அரியலூரில் ஓபிஎஸ் அணி, அமமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: