அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது

 

நாமக்கல், மே 30: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியில் கல்லூரியில், நடப்பு கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புக்கான, சிறப்பு இடஒதுக்கீட்டில் மாணவிகள் சேர்க்கை நேற்று தொடங்கியது. மொத்தம் உள்ள 970 இடங்களுக்கு 5,757 மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை நேற்று துவங்கியது. இக்கல்லூரியில் மொத்தம் உள்ள, 13 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 970 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கைக்காக, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,757 மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், இளநிலைப் பட்டப்படிப்பு சிறப்பு இட ஒதுக்கீடு மாணவிகள் சேர்க்கை, நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சிறப்பு இட ஒதுக்கீட்டில், அனைத்து மாற்றுத்திறனாளி மாணவிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மகள், ஆதரவற்றோர், என, மொத்தம், 90 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக, 242 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். நேற்று மாலை, 2 மணி வரை தகுதி அடிப்படையில், 23 மாணவிகள் சேர்க்கை நடந்தது. முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு, வரும் ஜூன் 10 முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: