அரசு ஐ.டி.ஐ.,க்களில் கலந்தாய்வு துவங்கியது

சேலம்: அரசு ஐடிஐகளில் 2023-24ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, கடந்த மே மாதம் வௌியிடப்பட்டது. இதையடுத்து மே 24ம் தொடங்கி, ஜூன் மாதம் 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 20ம் ேததி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐகளில், ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஐடிஐகளில் மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சேலம் அரசு ஐடிஐயில் மண்டல இணை இயக்குநர் ராஜகோபாலன் தலைமையில், மாணவர்களுக்கு கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. சேலம் அரசு ஐடிஐக்கு மொத்தமாக 433 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதில், சுமார் 200 கலந்து கொண்டனர். அரசு இடஒதுக்கீட்டின் படி, நேற்று வரை 183 இடங்கள் நிரம்பியது. நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு, வரும் 13ம் முதல் கல்லூரி வளாகத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில் ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post அரசு ஐ.டி.ஐ.,க்களில் கலந்தாய்வு துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: