அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலையில் வாக்குப்பதிவு இயந்திர எண்கள் மாறியதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

புதுக்கோட்டை, :விராலிமலை தொகுதியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் எண்ணும் பணியின்போது முதல் இரண்டு சுற்றுகளிலும் 2 பெட்டிகளில் எண் மாறியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு முறை  வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.விராலிமலை சட்டமன்ற தொகுதி வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. அப்போது முதல் சுற்றில் 14 பெட்டிகள் எண்ணும் பணி துவங்கியது. அப்போது, 5ம் எண் பெட்டியை எடுத்த போது, பெட்டியில் ஒரு எண்ணும், கட்சி முகவர்களுக்கு அளித்த பட்டியலில் ஒரு எண்ணும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பெட்டி சீரியல் எண்ணில் கடைசி எண் மாற்றி எழுதப்பட்டது. ஸ்குரோலிங் அலுவலர் எண் 5க்கு பதில் 6 எண மாற்றி எழுதியது தெரியவந்தது. அந்த பெட்டி கல்குடி பஞ்சாயத்தில் பதிவான வாக்குகள் என்பதும் தெரியவந்தது. இதனால் திமுக உள்ளிட்ட கட்சி முகவர்கள் விவி பேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேர்த்து வைத்து வாக்குகளை எண்ண வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த பெட்டி ஒதுக்கி வைக்கப்பட்டு மீதமிருந்த அனைத்து பெட்டிகளும் எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் 5156 வாக்குகளும், திமுக வேட்பாளர் பழனியப்பன் 2519 வாக்குகளும் பெற்றிருந்தார்.பெட்டி எண் மாறியதால் அங்கு ஒன்றரை மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.தொடர்ந்து 2வது சுற்றிலும் ஒரு பெட்டி எண் மாறியதால் மீண்டும் அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது….

The post அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலையில் வாக்குப்பதிவு இயந்திர எண்கள் மாறியதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: