அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி தெப்ப உற்சவ திருவிழா கொடியேற்றம்

மன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆனித் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆனி மாத தெப்ப உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் தீட்சிதர்கள் கருடன் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஆரா தனை செய்து கோயில் தங்க கொடி மரத் தில் ஏற்றினர். அப்போது, பெருமாள் கல்யாண அவசர திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து பெருமாள் கண்ணன் அவதாரம், பரமபத நாதன் சேவை, வைரமுடி சேவை, ராமாவதாரம், ராஜ அலங்காரம் உள்ளிட்ட பல் வேறு சிறப்பு அலங்காரங்களில் தங்க, வெள்ளி, கருட உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஆனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வரும் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பெருமாள் ருக்மணி, சத்தியபாமா சமே தராக கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மாதவன், வர்த்தக சங்க நிர்வாகிகள், தீட்சிதர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கருடன் கொடி ஏற்றப்பட்டது

The post அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி தெப்ப உற்சவ திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: