அப்போலோ கேன்சர் சென்டர் சார்பில் புற்றுநோய்க்கு பிந்தைய வாழ்க்கைக்கான ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் அறிமுகம்

மதுரை, பிப்.3: புற்றுநோய்க்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வாக, ‘அன்மாஸ்க் கேன்சர்’(புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குவது) என்ற புரட்சிகரமான பரப்புரை திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்துள்ளது. மதுரையில் அப்போலோ நிறுவன மதுரை மண்டல சிஓஓ நீலகண்ணன் கூறும்போது, ‘‘புற்றுநோய் பற்றிய உண்மையை வெளிக்கொணர்வது, தவறான கண்ணோட்டங்களை மக்கள் மனதிலிருந்து அகற்றுவது மற்றும் சமூகத்திற்குள் புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

‘அன்மாஸ்க் கேன்சர்’ என்பது, சமூக பாகுபாடுகள், உதாசீனங்களை எதிர்கொள்கிற, புற்றுநோயை வென்று வாழ்பவர்களின் பயணமாகும். ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற இத்திட்டம் சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்கு ஆதரவளிக்கிற மற்றும் அவர்களை கரம் பிடித்து உயர்த்துகிற ஒரு சமூகத்தை உருவாக்கும் செயற்பணியாகும்’’ என்றார். புற்றுநோயியல் டாக்டர்கள் தேவானந்த், பாலு மகேந்திரா, தீனதயாளன் ஆகியோர் கூறும்போது, ‘‘புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிரான பாகுபாடும், உதாசீனமும் அவர்களது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை உருவாக்குகிறது.

இந்த முக்கியமான பிரச்சனை மீது சமூகத்திற்கு எடுத்துக்கூறி உணர்வூட்டுவதற்காக அன்மாஸ்க் கேன்சர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றனர். புற்றுநோய் வெற்றியாளர்கள் ராயப்பன், மாரிமுத்து ஆகியோர் கூறும்போது, ‘‘புற்றுநோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு எதிரான பாகுபாடு அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்பது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லதொரு அணுகுமுறையாக இருக்கிறது’’ என்றனர்.

The post அப்போலோ கேன்சர் சென்டர் சார்பில் புற்றுநோய்க்கு பிந்தைய வாழ்க்கைக்கான ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: