அதிமுக ஆட்சியில் ரூ.47 லட்சம் ஒதுக்கீடு வில்வராயன்குளம் குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும்

*வத்திராயிருப்பு விவசாயிகள் வலியுறுத்தல்வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் என்ற பெயரில் கண்மாய்களில் உள்ள மறுசீரமைப்பு பணிகளான கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், மதகு மாற்றுதல், கலிங்கல்  பராமரிப்பு பணிகள் மற்றும் கண்மாய்க்கு வரக்கூடிய வரத்து கால்வாய் உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்காக லட்சக்கணக்கான ரூபாய் சில கண்மாய்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்து பணி நடைபெற்றது.வத்திராயிருப்பு வில்வராயன்குளம் கண்மாய் 244.73 ஏக்கர் பாசன வசதி கொண்டது. இதனை 2020-2021ம் ஆண்டு முதலமைச்சரின் குடிமரத்து திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கண்மாய்க்கு வத்திராயிருப்பு நகருக்குள் வரக்கூடிய வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டது. அதோடு அர்ச்சுனா நதி ஆற்றுப்பகுதியில் தூர்வாரப்பட்டுள்ளது. கண்மாய் கரைகளுக்கு மட்டும் மண் போடப்பட்டு கரைகள் உயர்தப்பட்டது.  ஆனால், கண்மாய்க்குள் உள்ள கருவேல முட்செடிகள் அகற்றப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த கண்மாயில் என்னென்ன பணிகள் செய்வதற்கு எக்ஸ்டிமேட் போடப்பட்டது என்றும், இதில் என்னென்ன பணிகள் நடைபெற்றது என்றும், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் கண்மாய்க்குள் உள்ள முட்செடிகளை முழுமையாக அகற்றி நடுப்பகுதிடிய ஆழப்படுத்தி நீரின் கொள்ளளவு கூடுதலாக  ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அதிமுக ஆட்சியில் ரூ.47 லட்சம் ஒதுக்கீடு வில்வராயன்குளம் குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: