அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

வாழப்பாடி: சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வரும் 3ம் தேதி அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா 55வது நினைவு தினம் வரும் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் பெருமைகள் வார்த்தைகளில் அடங்காது. சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அதற்காக மேடை பத்திரிகை, நாடகம், சினிமா மற்றும் நூல்கள் என அனதை்து தளங்களையும் கையில் எடுத்துக்கொண்டு அதற்கு புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர். கடமை,கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் அண்ணாவின் நினைவு நாள் வரும் 3ம் தேதி(சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

The post அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: