அண்ணாமலை கூறுவதை நினைத்தால் சிரிப்பு வருது: கர்நாடகா முதல்வர் கிண்டல்

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டி: மேகதாது அணை கர்நாடகாவின் உரிமையை சார்ந்தது. இதை கட்டுவதற்கான விரிவான அறிக்கை  தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திரா ஷெகாவத்  உள்ளிட்டோரிடம் இருந்து, இந்த அணைக்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடி இதற்கு விரைவில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையும்  எங்களுக்கு உள்ளது. எனவே, மேகதாது அணை விஷயத்தில் தமிழக அரசு மட்டுமின்றி வேறு யாருடைய எதிர்ப்பையும் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். தமிழக பாஜ  தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். மேகதாது தடுப்பணை கட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அண்ணாமலை கூறுவதை நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. இத்திட்டம் நிறைவேறினால் இரண்டு மாநிலத்திற்கும் நன்மை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்….

The post அண்ணாமலை கூறுவதை நினைத்தால் சிரிப்பு வருது: கர்நாடகா முதல்வர் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: