அக்.1 முதல் 10ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை 5.94 கோடி: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:  சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, ஊக்கத் தொகையாக சொத்துவரியில் 5 சதவீதம் அதிகபட்சமாக 5000 வரை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடப்பு இரண்டாம் அரையாண்டிற்குரிய சொத்துவரியை, அரையாண்டு காலம் துவங்குவதற்கு முன்பாகவே 2021 செப்டம்பர் 30ம் தேதி 4,01,260 சொத்து உரிமையாளர்களும் மற்றும் இரண்டாம் அரையாண்டு காலம் துவங்கிய தேதி முதல் அதாவது அக்டோபர் 1 முதல் 10ம் தேதி வரையில் 1,37,760 சொத்து உரிமையாளர்ளும் செலுத்தியுள்ளனர். மேற்படி, இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியை இரண்டாம் அரையாண்டு தொடங்கிய 15ம் தேதிக்குள் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய சொத்துவரியில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக 5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்துவரியினை, 5 சதவீதம் ஊக்கத்தொகை பயன்பெற்று செலுத்த அக்டோபர் 15ம் தேதி இறுதி நாளாகும். அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு (நாளை) செலுத்தப்படும் சொத்துவரி தொகைக்கு கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்தப்பட வேண்டும். எனவே, சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை இரண்டு நாட்களுக்குள் (15ம் தேதிக்குள்) செலுத்தி ஊக்கத்தொகையை பெற்று பயனடையவும், 15ம் தேதிக்கு பிறகு தனிவட்டியுடன் சொத்து வரியை செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அக்.1 முதல் 10ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை 5.94 கோடி: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: