அகந்தையுடன் பேசினாரா ஸ்ரீலீலா?

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா, இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம் சாப்டர் 1: உதிரம் – தி பிளட் வுட்’ என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரீலீலாவின் நடனத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தனக்கு இணையாக நடனமாட எந்த நடிகரும், நடிகையும் கிடையாது என்று ஸ்ரீலீலா தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், ‘என்னிடம் எப்போதுமே அகந்தை கிடையாது. நான் அப்படி வளரவும் இல்லை. அனைவரையும் சமமாக மதிப்பவள் நான். இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் தங்கள் பாணியை மாற்றிக்கொள்ளுங்கள். என்னை நன்கு தெரிந்தவர்களுக்கு என்னை பற்றி நன்கு புரியும்’ என்றார்.

Related Stories: