‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’யில் விளையாட்டு கதை

ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம்.மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா நடிக்கும் படம், ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’. காவியா புரொடக்‌ஷன்ஸ், எஸ்2 மூவிஸ் சார்பில் பி.மஞ்சுநாத் தயாரிக்கிறார். கே.ஆர்.செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். அச்சு ராஜாமணி இசை அமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். ரெம்பன் பால்ராஜ் அரங்குகள் அமைக்க, எஸ்.பி.அகமது எடிட்டிங் செய்கிறார். ஜாக்கி பிரபு சண்டைப் பயிற்சி அளிக்க, சேலம் சரவணன் நிர்வாக தயாரிப்பு செய்கிறார்.

படம் குறித்து கே.ஆர்.செந்தில்நாதன் கூறுகையில், ‘விளையாட்டை மையப்படுத்தி படம் உருவாக்கப்படுகிறது’ என்றார். அஸ்மிதா கூறும்போது, ‘இதில், இதுவரை நான் நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன்’ என்றார். யாஷிகா ஆனந்த் கூறுகையில், ‘தமிழில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்துக்கு பிறகு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்த கதை என்னிடம் வந்தது’ என்றார்.

ரச்சிதா மகாலட்சுமி கூறும்போது, ‘தற்போது ஒரு படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும்போதே பல சவால்கள் தொடங்கிவிடுகின்றன. இது செந்தில்நாதன் சாரின் கனவு படைப்பு. அது நிறைவேற படக்குழு முழு அர்ப்பணிப்புடன் உழைக்கிறது’ என்றார்.

Related Stories: