பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தத்துடன் காதல் தனுஸ்ரீ தத்தாவின் ரகசியத்தை அம்பலப்படுத்திய மாஜி மேலாளர்

மும்பை: தமிழில் விஷாலுடன் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற படத்தில், ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா (42). மேலும் இந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். அவரது முன்னாள் மேலாளர் போலா ராம் மால்வியா, கடந்த ஜனவரி 2025ல் அளித்த பேட்டியில், தனுஸ்ரீ தத்தாவின் தொழில்முறை ஒழுக்கம் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார்.

தனுஸ்ரீ தத்தா தனது திரையுலக வாழ்க்கையில், பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தத்தை காதலித்ததாகவும், அவுட்டோர் படப்பிடிப்பில் திடீரென்று ஆதித்யா தத்துடன் கோவா செல்ல வேண்டும் என்று அடம்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி போலா ராம் மால்வியா கூறுகையில், ‘தனுஸ்ரீ தத்தாவுக்காக நான் கடினமாக உழைத்து, பிரமாண்டமான பட வாய்ப்புகளை வாங்கி கொடுத்தேன். ஆனால், அவர் ஆதித்யா தத்துடன் கோவா செல்ல 3 நாட்கள் விடுமுறை கேட்டார்.

அப்போது ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்ததால் நான் தடுத்தேன். அவர் கேட்கவில்லை. பிறகு நானே தயாரிப்பாளரிடம் பேசி அவரை அனுப்பி வைத்தேன். இதனால், கொல்கத்தாவில் புத்தாண்டு இரவு கலைநிகழ்ச்சி உள்பட பல முக்கிய ஒப்பந்தங்களில் குளறுபடி ஏற்பட்டது. பிறகு ஒரு வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு வந்த தனுஸ்ரீ தத்தா, எங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறி புதிய மேலாளரை நியமித்தார்’ என்றார். இந்த விவகாரம் குறித்து தனுஸ்ரீ தத்தா பதிலளிக்கவில்லை.

Related Stories: