கதையின் சஸ்பென்ஸை இணையத்தில் பகிராதீர்கள்: பிரியங்கா சோப்ரா திடீர் கட்டுப்பாடு

 

மும்பை: உலக அழகி பட்டம் வென்று, தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் ஹீரோயினாகவும், பாடகியாகவும் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பிறகு பாலிவுட் டிலும், ஹாலிவுட்டிலும் முன்னணி ஹீரோ
யினாக மாறி, இந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கி வரும் நடிகையாக புகழ்பெற்றுள்ளார். தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ என்ற பான் இந்தியா படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார்.
கடந்த 2023ல் ஒளிபரப்பாகி இருந்த ‘சிட்​டாடல்’ என்ற வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன், ஸ்டான்லி டுச்சி நடித்தனர். ஸ்பை திரில்​லர் கதை கொண்ட இதை நியூட்​டன் தாமஸ், ஜெஸிக்கா யு இணைந்து இயக்​கி​னர். இத்​தொடர் வெற்றிபெற்​றதை தொடர்ந்து அடுத்த சீசன் உரு​வானது. இதை ஹாலிவுட் இயக்​குனர்கள் ரூசோ சகோ​தரர்கள் தயாரித்​துள்ளனர். 7 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், அமேசான் பிரைம் வீடியோ​வில் வெளி​யானது.

இதில் பிரி​யங்கா சோப்​ரா, ரிச்சர்ட் மேடன் நடித்​துள்​ளனர். இந்த வெப்தொடரின் கதையை​யும், முக்​கிய திருப்பங்களை​யும் இணைய தளங்​களில் பகிரக்கூடாது என்று ரூசோ சகோ​தரர்களும், பிரி​யங்கா சோப்ராவும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். பிரியங்கா சோப்ரா கூறுகையில், ‘இந்த தொடர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அனைவரும் கடின​மாக உழைத்​துள்ளோம். கதை​யை பற்றிய சஸ்​பென்ஸ் திரை​யில் வெளிப்​படும்​போது​ மட்டுமே சுவாரஸ்யம் குறை​யாமல் இருக்​கும். எனவே, அதுபற்றி எதையும் வெளியே கசி​ய​வி​டாதீர்​கள்’ என்றார்.

 

Related Stories: