65 ஆண்டுகால சாதனை: எஸ்.வி.சேகர் கவுரவிப்பு

சென்னை: நடிகர் எஸ்.வி.சேகரின் 65 ஆண்டுகால நாடகங்கள், 55 ஆண்டு சினிமா பயணம், 50 ஆண்டு தொலைக்காட்சி, 7000 நாடகங்கள் நடத்தி சாதனை படைத்ததற்காக ‘லிவிங் லெஜண்ட்’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. சென்னை, கிருஷ்ண கான சபாவின் கோடை நாடக விழாவில் எஸ்.வி.சேகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தொழிலதிபர் நல்லிகுப்புசாமி செட்டி, செயலாளர் பிரபு, தலைமை நிர்வாக அதிகாரி சாஸ்வதி இணைந்து இந்த விருதை அவருக்கு வழங்கினர்.

விருதுக்கு நன்றி தெரிவித்த எஸ்.வி.சேகர் 50 ஆண்டுக்கு முன் 1976ல் அவர் அரங்கேறிய ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார். 50 ஆண்டுகளுக்கு முன் நடித்த அதே வேடத்தில் அதே வேகத்துடன் நடித்த எஸ்.வி.சேகரை நாடக ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வரிசையில் நின்று அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்த சாதனைகளுக்காக எஸ்.வி.சேகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories: