அமானுஷ்ய கேரக்டரில் நடிக்கும் தமன்னா

இந்தியில் ஏற்கனவே வெளியாகியுள்ள ‘ராகினி எம்எம்எஸ்’ என்ற படத்தின் 3ம் பாகத்தை ஏக்தா கபூர் இயக்குகிறார். இதில் சல்மான்கான் மைத்துனர் ஆயுஷ் சர்மா, ஆமிர் கான் மகன் ஜூனைத் கான் இணைந்து நடித்து வருகின்றனர். ஹீரோயினாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். அமானுஷ்யம் கலந்த திரில்லர் கதையுடன் உருவான இப்படத்தில் தமன்னா, அமானுஷ்ய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது தன்னை மையப்படுத்திய கதை என்பதால், இப்படத்துக்கு வழக்கமாக மற்ற படங்களுக்கு ஒதுக்கி தரும் நாட்களை விட கூடுதல் நாட்கள் ஒதுக்கி நடித்துள்ளார் என்று, தமன்னா தரப்பு தெரிவித்துள்ளது. சம்பளமும் அவருக்கு பல கோடி ரூபாய்க்கு பேசப்பட்டுள்ளது.

இப்படம் தனக்கு மற்றொரு திருப்புமுனையாக அமையும் என்று நம்பும் தமன்னா, தமிழில் சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார். இந்திய திரையுலகின் முன்னோடி இயக்குனர் வி.சாந்தாராம் இந்தி மற்றும் மராத்தி படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு ‘பர்சாயின்’, ‘ஆத்மி’, ‘சகுந்தலா’, ‘தோ ஆங்கேன் பாரஹாத்’, ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ ஆகிய படங்கள் இந்திய அளவில் புகழை கொடுத்தது. தற்போது அவரது வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தி ‘சித்ரபதி விசாந்தாராம்’ என்ற பெயரில் படம் உருவாகிறது. சாந்தாராமாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கிறார். சாந்தாராமின் 2வது மனைவியும், நடிகையுமான ஜெயயாக தமன்னா நடிக்கிறார்.

Related Stories: