சென்னை : சென்னையில் போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் தொடக்க விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்றார். ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள மை பாரத், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தை (நஷா முக்த் யுவா பார் விக்சித் பாரத் சங்கல்ப் அபியான் ) ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த இயக்கத்தை தொடங்கி வைத்து காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் சுமார் 10,000 இடங்கள் நேரலையில் இணைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டார். ஆளுநர் உறுதிமொழி படிக்க பங்கேற்பாளர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றனர்.
