விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு தஞ்சையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

தஞ்சாவூர்: விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டியும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று (3ம்தேதி) தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை 5.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கே.என்.நேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து காரில் இரவு 8 மணியளவில் தஞ்சாவூர் சென்றார். அங்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரவு தனியார் ஓட்டலில் தங்கினார். தொடர்ந்து இன்று (3ம்ேததி) காலை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின், கண்டன உரையாற்றுகிறார்.

Related Stories: