தமிழக அரசு அறிவித்தபடி மூடப்படவில்லை விதியை மீறி இயங்கும் டாஸ்மாக் கடைகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கன்னியாகுமரி: வீ த லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கி.மீ. கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை கன்னியாகுமரியில் நேற்று காலை, அமைப்பின் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இளைஞர்களுடன் இணைந்து அவரும் கடற்கரை பகுதியில் குப்பைகள் சேகரிப்பில் ஈடுபட்டார். காட்சி கோபுரத்தில் தொடங்கி, கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரை அண்ணாமாலை தூய்மை பணியில் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது :

தலைவர் என என்னை திரும்ப, திரும்ப அழைப்பது, என்னுடன் வந்து போட்டோ எடுக்க முண்டியடிப்பது என இருந்தால், ஏதோ ஒரு இடத்தில் நான் தோற்று விட்டேன் என்று அர்த்தம். இங்கு அனைவரும் தலைவர்கள் தான். உங்களுக்கு அன்பான வேண்டுகோள். ஒரு புகைப்படம் இல்லாத ஒரு இயக்கமாக நாம் மாற முயற்சி பண்ண வேண்டும்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் 129 மதுபான கடைகள் இன்னும் விதிமுறைகளை மீறி இயங்குகிறது. இதற்கான பட்டியலை அரசிடம் சமர்ப்பித்து உள்ளோம். தமிழ்நாடு அரசு விரைவில் இந்த கடைகளை மூட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: