தமிழக விவசாயிகள் நாக்பூரில் இறக்கம் மகாராஷ்டிரா அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த தமிழக விவசாயிகள் ரயிலில் பயணம் செய்தபோது நாக்பூரில் தடுத்து இறக்கிவிடப்பட்டதும், தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதும் கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகளை புண்படுத்தும் வகையில் டெல்லிக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். உடனடியாக மகாராஷ்டிரா அரசுடன் பேசி நாக்பூரில் விவசாயிகள் கட்டாயப்படுத்தி தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கும் காரணத்தை கேட்டு, கண்டித்து விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: