திருவாரூர், ஜூலை 31: மேகதாது அணை கட்டுமானத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என கூறியுள்ள ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிபடி பயிர்கடன் தள்ளுபடி வழங்காத தமிழக அரசை கண்டித்தும் திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. திருவாருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டம் துவங்கியவுடனே மேகதாது அணை கட்டுமானத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என கூறியுள்ள ஓன்றிய நீர்வளத்துறை அமைச்சரை கண்டித்தும், குறுவை சாகுபடியை இழந்துள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிட கோரியும், தேர்தல் வாக்குறுதிபடி பயிர்கடன் தள்ளுபடி வழங்காத தமிழக அரசை கண்டித்தும் திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
அதன்பின்னர் கூட்டம் துவங்கி நடைபெற்ற நிலையில் விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். இறுதியாக கலெக்டர் மோகனசந்திரன் பேசுகையில், கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் 2026-27ல் குறுவை பருவத்தில் நெல் பயிரானது 60 ஆயிரத்து 870 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 6 ஆயிரத்து 551 எக்டேர் பொது, 17 ஆயிரத்து 274 எக்டேர் திருந்திய நெல் சாகுபடியிலும், நேரடி நெல் விதைப்பு 12 ஆயிரத்து 378 எக்டேர் என மொத்தம் 36 ஆயிரத்து 202 எக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தல் 2026-27-ம் ஆண்டில் 899 மெ.டன் நெல் விதைகள் இருப்பு உள்ளது. மேலும் பயிர் சாகுபடிக்குத் தேவையான உரம் இருப்பு உள்ளது. அதன்படி யூரியா 6 ஆயிரத்து 967 மெ.டன், டிஏபிஉரம் 2 ஆயிரத்து 263 மெ.டன், கம்பளக்ஸ் 2 ஆயிரத்து 942 மெ.டன், பொட்டாஷ் உரம் 622 மெ.டன் மற்றும் எஸ்எஸ்பிஉரம் 598 மெ.டன் என மொத்தம் 13 ஆயிரத்து 432 மெ.டன் உரம் இருப்பில் உள்ளது.
மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2025-26ம் ஆண்டு 64 ஆயிரத்து 161 விவசாயிகளுக்கு ரூ.505.28 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதிஆண்டு 2026-27-ல் 97 விவசாயிகளுக்கு ரூ.59 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவசுப்ரமணியன், கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா, வேளாண் இணை இயக்குநர் வித்யா, துணை இயக்குனர் ஹேமாஹெப்சிபாநிர்மலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
