நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

 

 

செங்கம், ஜூலை 31: நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செங்கம் அடுத்த நீப்பத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செங்கம் வட்டாரம் சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன் தலைமை தாங்கினார்.

நீப்பத்துறை அங்கன்வாடி மைய பொறுப்பாளர் கோமதி, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், குழந்தை திருமணம் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் புகார் அளிக்க சைல்ட் ஹெல்ப் லைன் 1098 மற்றும் பெண் குழந்தைகளை பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் சேர்த்தல், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல் ஆகியவை குறித்து தங்கள் பகுதியில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மாணவர்கள் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று பேசினார். அப்போது கல்லடாவி அங்கன்வாடி மைய பொறுப்பாளர் மைதிலி, ஆசிரியர்கள் பழனி, சுகுணா, உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: