ஹோல்சேல் ரேட்டில் தங்கமா? தமிழ்நாட்டு மக்களுக்கு ஆச்சரியம் தரும் ரீகல் ஜுவல்லர்ஸ்!

 

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி நகை மேனுஃபேக்சரர் மற்றும் ஹோல்சேலர் நிறுவனங்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், ஜூலை 31 அன்று சென்னை தி.நகரில் தனது முதல் ஷோரூமைத் திறப்பதன் மூலம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நகை சந்தைகளில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ். தனது 48 ஆண்டுகால கலை நுணுக்கத்தையும், நம்பிக்கையையும் மற்றும் தங்கள் தயாரிப்பின் பாரம்பரியத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் இந்த நிறுவனம், பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சிம்ரன் ஆகியோரை தமிழ்நாட்டிற்கான தனது பிராண்ட் அம்பாசிடராக அறிமுகப்படுத்தியதுடன், இந்த மாற்றம்… அது நல்லதுதானே? என்ற விளம்பர வாசகத்துடன் தனது திறப்பு விழாவை அறிவித்துள்ளது.

48 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியத்துடன் செயல்பட்டு வரும் ரீகல் ஜுவல்லர்ஸ் சிறப்பான டிசைன்கள் மற்றும் அதே சமயம் வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் தரத்தில் எந்த சமரசமும் இல்லாத அணுகுமுறையால் கேரளா மற்றும் கர்நாடகாவில் பல தலைமுறை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தனது விரிவாக்கத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த நகைகளை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக மொத்த விலையில் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும் நகை வாங்கும் அனுபவத்தில் ஒரு அர்த்தமுள்ள ஒரு சிறந்த மாற்றத்தை தமிழ்நாட்டிற்கு இந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்து பேசிய ரீகல் ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநரும் & தலைமைச் செயல் அதிகாரியுமான (Managing Director & CEO) விபின் சிவதாஸ் கூறியதாவது: தங்க நகை வாங்குவது குறித்த வாடிக்கையாளர்களின் பார்வையை மாற்றுவதற்காக ரீகல் ஜுவல்லர்ஸ் தமிழ்நாட்டுக்கு வருகிறது. மேனுஃபேக்சரர் மற்றும் ஹோல்சேலர் ஆகியோர்களிடமிருந்து நேரடியாக நகைகளை வாங்குவதுதான் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு மாற்றம் என்று நாங்கள் நம்புகிறோம். அதுதான் எங்களுடைய விளம்பர வரியான, ‘இந்த மாற்றம்… அது நல்லதுதானே?’ பிரதிபலிக்கிறது.”

“தமிழ்நாட்டில் எங்களுடைய பயணத்தைத் தொடங்குவது, ரீகல் ஜுவல்லர்ஸின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சென்னை மற்றும் புதுச்சேரி ஆகியவை தமிழ்நாட்டிற்கான எங்களுடைய நீண்டகாலத் திட்டத்தின் தொடக்கம் மட்டுமே. மேனுஃபேக்சரர் மற்றும் ஹோல்சேலர் ஆகியோர்களிடமிருந்து நேரடியாக நகைகளை வாங்குவதன் நன்மைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்.”

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ் : தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளவுள்ள தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரீடெயில் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, ஷோரூம் ஆபரேஷன்ஸ், லாஜிஸ்டிக்ஸ், நிர்வாகம் மற்றும் பிற துணைப் பிரிவுகளில், வரும் ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க ரீகல் ஜுவல்லர்ஸ் திட்டமிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடதக்கது.

தமிழகத்தில் ரீகல் ஜுவல்லர்ஸின் முதல் ஷோரூம் ஜூலை 31ஆம் தேதி சென்னை தி.நகரில் திறக்கப்படுகிறது. இது, தமிழகத்தில் அவர்களின் நீண்டகால பயணத்திற்கான தொடக்கமாக அமையும். இதன்மூலம் மேனுஃபேக்சரர்களிடமிருந்து நேரடியாக கிடைக்கும் தரம், நேர்த்தியான நகை வடிவமைப்புகள், சிறந்த கலை நுணுக்கங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ரீகல் ஜுவல்லர்ஸ் தனது புதிய பயணத்தை தமிழகத்தில் தொடங்குகிறது.

ரீகல் ஜுவல்லர்ஸ் பற்றி
ரீகல் ஜுவல்லர்ஸ், தென்னிந்தியாவின் முன்னணி மேனுஃபேக்சரர் மற்றும் ஹோல்சேலர் நிறுவனங்களில் ஒன்றாகும். தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான மதிப்பு ஆகியவற்றில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படும் ரீகல் ஜுவல்லர்ஸ். சான்றளிக்கப்பட்ட HUID 916 ஹால்மார்க் பெற்ற நகைகளை மேனுஃபேக்சரர்களிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு மொத்த விலையில் வழங்குகிறது. மேலும் அதிகமான டிசைன், கலெக்‌ஷன் மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை ஆகியவை ரீகல் ஜுவல்லர்ஸின் முக்கியமான சிறப்பம்சங்களாகும்.

Related Stories: