பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்

டிரினிடாட்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது. பிரையன் லாரா அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். பாகிஸ்தான் அணியில் இடது கை சுழற்பந்துவீச்சாளர் அலி உஸ்மான் அறிமுகமானார்.

தொடக்க வீரர்களாக தேஜ்நரைன் சந்தர்பால், பிராண்டன் கிங் களமிறங்கினர். கிங் 12 ரன், சந்தர்பால் மற்றும் அமிர் ஜாங்கூ தலா 21 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 36.3 ஓவரில் 106 ரன்னுக்கு 3 விக்கெட் இழண்ட்து சற்று திணறியது. இந்த நிலையில், கவெம் ஹாட்ஜ் ஷாய் ஹோப் இணைந்து 4வது விக்கெட்டுக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்திருந்தது. கவெம் ஹாட்ஜ் 83 ரன் (181 பந்து, 9 பவுண்டரி), ஷாய் ஹோப் 39 ரன்னுடன் (91 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாக். பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 2, ஆமிர் ஜமால் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories: