குஜராத் கனமழை பலி 35ஆக உயர்வு

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த ஒருவாரமாக கனமழை கொட்டியதால் மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் கனமழைக்கு 35 பேர் பலியாகி விட்டனர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வல்சாத் மற்றும் நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று வெள்ள நீர் வடியத் தொடங்கிய நிலையில், சேதங்களை மதிப்பிடும் பணிகளையும், நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான தூய்மைப் பணிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளையும் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

 

Related Stories: