சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆந்திராவில் 44.89 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கம்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (எஸ்ஐஆர்) தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நிறைவடைந்தது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி விவேக் யாதவ் கூறியதாவது:  ஆந்திர மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 694 வாக்காளர்கள் உள்ளனர். 44 லட்சத்து 89 ஆயிரத்து 488 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 15 லட்சத்து 22 ஆயிரத்து 174 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 லட்சத்து 43 ஆயிரத்து 886 வாக்காளர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயந்துள்ளனர். மற்ற பகுதிகளில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 216 ஆகும். மேலும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 885 ஆகக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: