கவுகாத்தி: அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வௌியிட்ட அறிக்கையில், “அசாமில் கன மழை, வௌ்ளத்தில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
சாரைடியோ, தேமாஜி, திப்ருகர், கோலாகாட், ஹோஜாய், ஜோர்ஹாட், கார்பி ஆங்லாங், நாகான் மற்றும் சிவசாகர் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 7,05,100க்கும் மேற்பட்டோர் மழை, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 856 கிராமங்கள் வௌ்ள நீரில் மூழ்கி உள்ளன” என தெரிவித்துள்ளது.
