திருவனந்தபுரம்: இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து காசர்கோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்தவர் ஸ்ரீஜித். ஸ்ரீஜித் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக ஒரு இளம்பெண் காசர்கோடு மாவட்ட காங்கிரஸ் தலைவரிடம் புகார் அளித்தார். விசாரணையில் அந்த இளம்பெண்ணின் புகார் உண்மை என தெரியவந்த தையடுத்து பதவியில் இருந்து ஸ்ரீஜித் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
