ஜம்மு சர்வதேச எல்லையில் பாக். டிரோன்கள்

ஜம்மு: ஜம்மு -காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் விஜய்ப்பூர் பகுதியில் உள்ள தரோர் என்ற எல்லை கிராமத்துக்கு மேலே நேற்று முன்தினம் பாகிஸ்தானை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் டிரோனை ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். சிறிது நேரத்தில்அந்த டிரோன் சர்வதேச எல்லையை கடந்து மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பிச்சென்றதாக கூறப்படுகின்றது. மேலும் கதுவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் சக் நலுவா கிராமத்திலும் மற்றொரு டிரோன் சிறிது நேரம் வட்டமடித்து உள்ளது.

Related Stories: